செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 1 ஜூலை 2024 (11:57 IST)

விஷ சாராய வழக்கு: கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்..!

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் கண்ணுக்குட்டி உள்பட 11 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆதார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 11 பேரும் கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட 11 பேர் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சற்று நேரத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.  மேலும் விஷ சாராய வழக்கில் இதுவரை சிபிசிஐடி  21 பேரை கைது செய்துள்ள நிலையில் இன்று 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கள்ளக்குறிச்சி யாருக்கு கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பதும் நூற்றுக்கு மேற்பட்ட ஒரு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு சமீபத்தில் சிபிசிஐடி போலீஸ் யாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் இன்னும் சில கைது நடவடிக்கைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva