வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?
வக்பு சட்ட திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களவை பொறுத்தவரை மிக எளிதில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் அதிக வாய்ப்பு உள்ளது.
ஏனெனில், மக்களவை பொறுத்தவரை பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்பிக்கள் இருப்பதால், மிக எளிதாக மசோதா நிறைவேற்றப்படும்.
ஆனால், அதே நேரத்தில் மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேவையான எம்பிக்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வாக்களிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதாவது, பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய கூட்டமைப்பிடம் தற்போது 125 எம்பிக்கள் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் எம்பிகளில் ஏழு அல்லது எட்டு பேர் அவைக்கு வரவில்லை என்றால், அல்லது எதிர்த்து வாக்களித்தால், இந்த மசோதா தோல்வி அடையும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், அதிமுக எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றும், அதிமுக பாஜக கூட்டணி கனிந்து வருவதால், அவர்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran