இங்கிலாந்து ராணியின் கணவருக்கு போலீஸார் அட்வைஸ்...
உலகையே ஆண்ட நாடு இங்கிலாந்து. தற்போதும் அங்கு அரச வம்சத்தாருக்கு ஏகபோக மரியாதை கவனிப்புகள் எல்லாம் தடபுடலாக நடந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் விபத்தில் சிக்கிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் காரில் சென்ற போது சீட் பெல்ட் அணியாமல் சென்றுள்ளார்.
அப்போது சாண்டரின்ங்காம் பகுதியில் தன் புதிய லேண்ட்ரோவர் காரை இயக்கி வந்த இளவரசர் பிலிப்பை ( 97) போலீஸார் தடுத்து நிறுத்தி,காரில் செல்லும் போது சீட் பெல்ட் போட வேண்டும், என அறிவுறுத்தினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.