கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை மணந்த வாலிபர்: கதிகலங்கவைக்கும் பின்னணி

marry
Last Modified திங்கள், 14 ஜனவரி 2019 (12:30 IST)
ஹரியானாவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் தன் மனைவியை இப்படி செய்த கொடூரர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க தீவிரமாக போராடியும் வருகிறார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜிஜேந்தர் என்பவருக்கு கடந்த 2015ல் திருமணம் நடைபெற்றது. திருமண நிச்சயத்திற்கு பின்னர் ஜிஜேந்தருக்கு போன் செய்த மணப்பெண் தான் 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், தமக்கும் அவருக்கும் செட் ஆகாது எனவும் கூறியுள்ளார்.
 
இதனைக்கேட்டு ஆடிப்போன ஜிஜேந்தர் அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறினார். சற்றும் யோசிக்காமல் அந்த பெண்ணையே கரம் பிடித்தார்.
 
திருமணம் ஆனது முதல் தனது மனைவியை இப்படி செய்த கொடூரர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க படாதபாடு பட்டு வருகிறார். தன் சொத்தை விற்று கேஸை நடத்தி வருகிறார். சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் சண்டை போடுபவர்களுக்கிடையே இந்த மாமனிதரை என்ன சொல்வது..


இதில் மேலும் படிக்கவும் :