ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (20:50 IST)

பசுமாட்டிடம் தவறாக நடந்த கொடூரர்கள்...3 பேரை கட்டிவைத்து அடித்த மக்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்தில் உள்ள கிராமம் பெருமாக்கவுண்டன் பாளையம். இங்கு வசித்துவருபவர் கந்தசாமி. இவர் விவசாயி, தன் வீட்டில் பசு  மாடுகளை வளர்த்து வருகிறார். 
இந்நிலையில் சில நாட்களாக பசு மாடுகள் பெலவீனமாகி வருவதை அவர் கவனித்தார். அதனால் இரவிலும் பசுமாட்டை கவனிக்கத் தொடங்கினார்.
 
எனவே நேற்று இரவில் தன் வீட்டிற்கு வெளியே ஒளிந்திருந்து பசுமாட்டை கண்காணித்து வந்தார். அப்போது 3 பேர் பசுமாட்டை அவிழ்த்து ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் பசுமாட்டை காணதததால்,கந்தசாமி  வீட்டருகே வசிப்பவர்களுடன் சேர்ந்து மாட்டை தேடியுள்ளனர்.
 
அப்போது,ஒரு மறைவான இடத்தில் வைத்து 3 பேரும் பசுமாட்டை  பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.இதனல ஆவேசமடைந்த ஊர் மக்கள் 3 இளைஞர்கள் சரமாறியாக தாக்கி மரத்தில் கட்டிவைத்து அடுத்து உதைத்துள்ளனர். 
 
இதுகுறித்து போலீஸிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலிஸார் அந்த 3 பேரிடம் விசாரித்தபோது,  பசுமாட்டை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதை ஒப்புக்கொண்டனர். இதைகேட்டு அதிர்ந்துபோன போலீஸார் அவர்களை கைதுசெய்துள்ளது விசாரித்துவருகின்றனர்.