வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (20:21 IST)

கோயில் திருவிழாவுக்கு தயாராகும் தடபுடல் ஆட்டு பிரியாணி...

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தை யாரும் அவ்வளது எளிதில் மறக்க மாட்டார்கள் . ஆமாம் ஒரு தேர்தலில் ஓட்டுக்காக புது பார்முலாவை இறக்கிவிட்டார்கள் அரசியல் வாதிகள் . அதே திருமங்கலத்துகு பக்கத்து ஊர் தான் இந்த வடக்கம்பட்டி கிராமம்.
வரும் 25 ஆம் தேதி இந்த வடக்கம் பட்டியில் தான் திருவிழா நடக்க உள்ளது. அதில் கடவுளுக்கு நேர்த்திக் கடனாக விடப்படும் ஆடு,கோழிகள் தான் இரவுவேளையின் போது கோவில் பூசாரியால் வெட்டி அப்போழுதே பிரியாணி செய்யப்படும். அதன் பின்னர் இது மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்று தெரிகிறது.
 
இது அந்த ஊரின் பிரசித்தி பெற்ற விழா என்பதால் இவ்வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வருடமும் 200 ஆடுகள் நேர்த்திக்கடனாக சார்த்தலாம் என்றும் முதலில் முனீஸ்வர சாமிக்கு படையலிட்டுவிட்டு பின்னர் அது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகிறது.