செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 21 ஜனவரி 2019 (20:19 IST)

நெருங்கும் தேர்தல்; பாஜகவில் இணையும் ரசிகர்கள்: ஒரே பேப்பரில் அஜித் வைத்த செக்!

நடிகர் அஜித்குமார் எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை அதில் விருப்பமும் இல்லை என திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதுதான் தற்போது வைரலாகி வருகிறது. 
 
அந்த அறிக்கையில், நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பவன். என்னுடைய தொழில் நடிப்பு என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்துள்ளேன். எனது ரசிகர் மன்றங்களைக் கலைத்தது கூட இந்தப் பின்னணியில்தான். 
 
என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையும், என ரசிகர்கல் பெயர்களையும் சம்பந்தப்படுத்தி சில செய்திகள் வெளியாகிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற ஐயபாட்டை பொதுமக்களிடையே விதைக்கும். 
இதன் மூலம் நான் தெரிவிப்பது என்னவெனில் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. ஆனால் அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன். 
 
உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும். என் பெயரோ அல்லது என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்வில் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை என குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 
அஜித் இந்த அறிக்கையை வெளியிட என்ன காரணம் என கேட்டால், சமீபத்தில் அஜித் ரசிகர்கள் சிலர் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவில் சேர்ந்தனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவந்தரராஜன் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். 
 
தமிழகத்தில் தாமரையை மலர செய்ய உதவ வேண்டும் எனவும், பிரதமர் மோடியின் திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனாலேயே அஜித் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்க கூடும் என தெரிகிறது.