திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (09:01 IST)

நேற்று அறிமுகமான த.வெ.க கொடி! இன்று ஆழ்வார்பேட்டையில் ம.நீ.ம கூட்டம்! - உள்ளாட்சி தேர்தலில் மோதலா?

நேற்று விஜய்யின் த.வெ.க கட்சிக்கொடி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

 

 

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டில் புதிது இல்லை என்றாலும், உச்சத்தில் உள்ள நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அப்படியாக நடிகர் விஜய் அரசியலில் அதிகாரப்பூர்வமாக இறங்கி செயலாற்றி வரும் நிலையில் நேற்று தனது கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க.கட்சி போட்டியிட்டு தங்களுக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்பது குறித்து ஆராய உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆலோசனை கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற உள்ளது. கட்சி தொடங்கி பரபரப்பாக அரசியல் பணிகளில் இருந்து வந்த கமல்ஹாசன், பின்னர் பிக்பாஸ் ஷோ, படங்கள் நடிப்பது என பிஸியாகி விட்டதால் கட்சியின் செயல்பாடுகள் தொய்வடைந்து காணப்படுகின்றன. மேலும் கடந்த காலங்களில் சில முக்கிய நிர்வாகிகளே கட்சியை விட்டு வெளியேறிய சம்பவங்களும் நடந்தன.

 

இன்று நடைபெறும் மக்கள் நீதி மய்ய ஆலோசனை கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் விவாதிக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. 

 

Edit by Prasanth.K