1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (22:56 IST)

தமிழக அளவில் ஒரே வினாத்தாளை பயன்படுத்துவதும் முறையை கைவிட வேண்டும்!- ஆசிரியர் கூட்டணி

karur
4 மற்றும் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அளவில் ஒரே வினாத்தாளை பயன்படுத்துவதும் முறையை கைவிட வேண்டும் – கரூரில் நடைபெற்ற ஆசிரியர் கூட்டணி ஆர்பாட்டத்தில் வலியுறுத்தி முழக்கங்கள்.
 
கரூரில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சி.பி.எஸ் ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
 
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. குளித்தலை கல்வி மாவட்ட தலைவர் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கரூர் கல்வி மாவட்ட செயலாளர் ஆ.பிரான்சிஸ் டேனியல் ராஜா அனைவரையும் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் வின்செண்ட் சிறப்புரையாற்ற, கோரிக்கைகள் குறித்த விளக்கவுரையினை ஜெயராஜ் ஆற்றினார்.

இதனை தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் மா.பாலசுப்பிரமணி, கரூர் கல்வி மாவட்ட தலைவர் செல்லமுத்து, கரூர் வட்டார செயலாளர் அருள்குழந்தை தேவதாஸ், தோகைமலை வட்டார செயலாளர் பாலமுருகன், கடவூர் வட்டார செயலாளர் மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், இந்த ஆர்பாட்டத்தில் 4 மற்றும் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாளை பின்பற்றி தேர்வு நடத்தும் முறையை இனிவரும் தேர்வுகளில் தொடக்க கல்வித்துறை கைவிட வேண்டும், தொடக்க கல்வித்துறையில் மாநிலம் முழுவதும் விதிகளுக்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் ஆணைகளை ரத்து செய்துவிட்டு அப்பணியிடங்களில் தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் வழங்கிட வேண்டுமென்று 30 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோரிக்கைகளை முழக்கங்களாக ஆர்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டன.

Edited by Sinoj