வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 9 நவம்பர் 2022 (20:28 IST)

10% இட ஒதுக்கீடு செல்லும் வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ''அநீதியின் உச்சம்'- திருமா

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ''அநீதியின் உச்சம்''  என்று திருமாவளவன் டுவீட் பதிவிட்டுள்ளார்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற  இந்த 103 வது அரசியல் சட்டத் திருத்தத்தை உறுதி செய்யும் வழக்கின் தீர்ப்பு   நேற்று முன் தினம்   காலை வெளியானது.

இந்த  தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வெளியிட்டிருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில்,  திமுக,. விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதனை அடுத்து நிலையில் அதிக நீதிபதிகள் 10 சதவீத இட ஒதுக்கீடு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு செல்லும் என தீர்ப்பளித்து உள்ளதை அடுத்து இந்த சட்டம் தொடர்ந்து இருக்கும்.

இதை  பாஜகவினரும், கா ங்கிரஸும் வரவேற்றுள்ளன.

ஆனால்,  திமுக , விசிக  உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் ‘’சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து சமூகநீதிக்கு எதிரான முன்னேறி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம்’ என  மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த  நிலையில், 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சரும்  அக்கட்சியின் பொதுச்செயலாளரும்  துரைமுருகன் நேற்று  அறிவித்தார்.

இந்த நிலையில்,  இதுகுறித்து, சமூகவலைதளத்தில்  கார்டூங்கள் பரவலாகி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன், இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், முன்னேறிய சமூகங்களைச் சார்ந்த ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என சங்பரிவார் அரசும் உச்சநீதிமன்றமும் சமூகநீதிக்கெதிராக இழைத்துள்ள அநீதியை கீழுள்ள கார்ட்டூன்கள் உணர்த்துகின்றன. எத்தனை சதவீதம் #FC_ஏழைகள் என்கிற புள்ளிவிவரம் இல்லாமலேயே 10% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளனர்.

அநீதியின் உச்சம். #EWS என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj