வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2022 (15:23 IST)

10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் : அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் முதல்வர் ஸ்டாலின்!

cm stalin
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது 
 
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நவம்பர் 12ஆம் தேதி இது குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் 
 
இந்த கூட்டத்தில் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran