பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த சக மாணவர்கள்! – கிருஷ்ணகிரியில் பரபரப்பு!
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவர்கள் சிலர் சக மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார் மாணவி ஒருவர். அவருடன் அடிக்கடி பேசி வந்த 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து திட்டமிட்டு அந்த மாணவியை வெளியே அழைத்து சென்றுள்ளனர். பிறகு வலுக்கட்டாயமாக மாணவிக்கு மதுவை கொடுத்து, பிறகு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த மாணவி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். மாணவியின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அந்த மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உடன் படிக்கும் மாணவர்களாலேயே மாணவிக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.