வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 ஜூலை 2023 (12:44 IST)

மாரத்தானில் ஓடிய மாணவர் மாரடைப்பால் பலி! – மதுரையில் அதிர்ச்சி!

heart attack
மதுரையில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர் மாரடைப்பால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மதுரையில் இன்று இரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள், நடுத்தர வயதினர் பலரும் பங்கேற்றனர். இப்போட்டியில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் இறுதியாண்டு படித்து வரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தினேஷ் என்ற மாணவரும் கலந்து கொண்டார்.

மாரத்தான் போட்டி முடிந்த சில நிமிடங்களுக்கு பின்னர் தினேஷுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக குறைவாக இருந்த நிலையில் இதய அடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் இழந்துள்ளார்.  

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K