வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (14:28 IST)

வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பு - மதுரையில் பரபரப்பு!

மதுரை வைகை ஆற்றில் கரையோரம் உள்ள வீடுகள் வணிக நிறுவனங்களின் கழிவு நீரை கலப்பவர்கள் மீது அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில் மதுரை மாநகராட்சியின் வாகனத்தில் கழிவு நீரை கொண்டு வந்து வைகை ஆற்றின் மேம்பாலத்திலிருந்து வைகை ஆற்றுக்குள் நேரடியாக கலக்கும் காட்சிகள் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரையின் புகழ்பெற்ற வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கக் கூடாது என்பதற்காக வைகை ஆற்றுக் கரையோரம் இருக்கும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கழிவுநீரை வைகை ஆற்றில் கலந்தால் அபராதம் மிதிக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் வைகை ஆற்றில் கழிவு நீரை கலப்பவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை  மதுரை மாநகராட்சிக்கு  உத்தரவிட்டுள்ளது 
 
இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் வாகனத்திலேயே கழிவு நீரை கொண்டு வந்து வைகை ஆற்று மேம்பாலத்தின் மேல் வாகனத்தை நிறுத்தி நேரடியாக வைகை ஆற்றுக்குள் கழிவு நீரை கலக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.