திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2017 (08:29 IST)

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை தான்; ஆய்வில் தகவல்

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இச்செயலில் ஈடுபடுபவர்களை போலீஸார் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர்.
இன்றைய நவீன உலகத்தில் பெண்கள் பலர், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த்வும், அவரவர்களின் படிப்புக்கேற்ப வேலைக்கு செல்கின்றனர். அவர்கள் வேலைக்கு செல்லும் இடத்தில், பொது இடங்களென அவர்கள், பல காம மிருகங்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர். குறிப்பாக வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதனைத் தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
சமீபத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட ஆறு மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் பெண்களுக்கு எதிராக 13,808 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது ஒரு லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 43 லட்சம் பெண்கள் உள்ளநிலையில், அவர்களுக்கு எதிராக 544 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதாவது ஒரு லட்சம் பெண்களில் 12 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்  பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதல் இடத்தை பிடித்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.