வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (12:47 IST)

100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1,000 ரூபாயாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

100 ரூபாய் முத்திரைத்தாள் ஆயிரம் ரூபாய் என்றும் 20 ரூபாய் முத்திரைத்தாள் 200 ரூபாயாகவும் உயர்கிறது என்றும் இதற்கான சட்ட திருத்த முன் வடிவு சட்டசபையில் நிறைவேறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
சட்டமன்றத்தில் இன்று வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட திருத்த முன் வடிவம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின் படி 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் ரூ.1000 என உயருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
2001 ஆம் ஆண்டிலிருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை என்றும் எனவே முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன் வடிவு சட்டசபையில் நிறைவேறி உள்ளதாகவும் ஆளும் அரசு தெரிவித்துள்ளது. 
 
முத்திரைத்தாள் கட்டண உயர்வுக்கான சட்ட மசோதாவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran