1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Duraimurugan says about Governor Ravi

பாஜகவில் போயி சேர்ந்துகொள்: சட்டப்பேரவையில் கொதித்தெழுந்த துரைமுருகன்

கவர்னர்
தமிழக ஆளுநர் ரவியை பாஜகவில் போய் சேர்ந்து கொள் என அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக சட்டமன்றத்தில் பேசியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் என்று ஒரு படத்தை காண்பித்தார்கள். அதில் சாவர்க்கர் திரும்பத் திரும்ப வருகிறார். ஆனால் காந்தி நேரு இடம்பெறவே இல்லை. 
 
காந்தி இல்லாமல் சுதந்திரமா? யாரு அப்பன் வீட்டு பணத்தை வைத்து இதை காட்டுகிறார்கள்? யார் வீட்டு பணம்? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி அனுப்பினார். 
 
பாஜக உங்களுக்கு பிடித்திருந்தால், அந்த கட்சியில் போய் சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், கவர்னருக்கு இருக்க வேண்டிய அழகு அவரிடம் இல்லை நேற்று கூட பார்த்தேன் பிரதமர் வரும்போது முகத்தை உர்ரென வைத்திருந்தார் என்று அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பிளஸ் 2 கணினி அறிவியல் வினாத்தாளில் பிழைகள்: முழு மதிப்பெண் வழங்க கோரிக்கை..!