1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (16:19 IST)

பேக்கரி உரிமையாளரை மிரட்டி மாமூல் வசூலித்த ரவுடி கும்பல்!

chennai rowdy
சென்னையை அடுத்துள்ள சுங்கவார் சத்திரம் அருகே பேக்கரி உரிமையாளரை கத்தியை காடி மிரட்டி மாமூல் வசூல் செய்த ரவுடி கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள சுங்கவார் சத்திரம் அருகே கடந்த வியாழன் அன்று கஞ்சா போதையில் 3 ரவுடிகள் பேக்கரி கடையில் இருந்த  பெண் உரிமையாளரிடம் ரூ.1 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டினர்.

இதற்கு அவர் ரூ. 200 கொடுத்ததாக தெரிகிரது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரூ. 100  கேட்டதற்கு ரூ. 200 தருகிறாயா? எனக் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பொருட்களை சேதப்படுத்தியதுடன்  கையில் கத்தியுடன் அவரை அங்கிருந்தவரையும் மிரட்டிய கும்பல் ரூ.100 பணம் பெற்றுச் சென்றனர்.

இக்காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இக்காட்சியில் இணையதளத்தில் வைரலான நிலையில், இதுதொடர்பாக  சுங்கவார் சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து  வினோத்குமார், அபிமன்யூ, ஆகிய இருவரை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள ரவுடி முகேந்தர் என்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.