1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (18:53 IST)

கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் ரூ.2000கோடி வழங்கப்பட்டுள்ளது- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

chess stalin
திமுக அரசின் கட்டணமில்லா  பேருந்து திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இதுவரை ரூ.2000கோடி வழங்கப்பட்டுள்ளதாக இன்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு தமிழகத்தில் நடந்த சட்டபேரவைத் தேர்தலில் திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அமைந்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  மா நிலம் முழுவதும் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  திமுக அரசின் கட்டணமில்லா  பேருந்து திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இதுவரை ரூ.2000கோடி வழங்கப்பட்டுள்ளதாக இன்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் ரூ.2000  கோடி பணம் மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது என்றும் இது அரசு வருமான இழப்பாக கருதவில்லை  மகளிர் மேம்பாட்டு வளர்ச்சி திட்டமாகவே கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பெண்களைப் பார்த்து ஓசியில் தானே பஸ்ஸில் செல்கிறீர்கள் எனக் கேட்டு சர்ச்சையாகி, இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj