ஆன்லைன் விளையாட்டுக்கு என்ன தண்டனை? விளம்பரம் செய்தால் என்ன தண்டனை?
ஆன்லைன் விளையாட்டை விளையாடுபவர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு விளம்பரம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை என்பது குறித்து சட்டமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆன்லைன் விளையாட்டிற்கு தடை செய்யும் மசோதா நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த விளையாட்டை விளையாடினால் மூன்று மாதங்கள் சிறை அல்லது 5000 ரூபாய் அபராதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஆன்லைன் விளையாட்டை அளிக்கும் நிறுவனத்தை நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது 10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது \
மேலும் ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக தண்டனை பெற்றவர் மீண்டும் அதே குற்றத்தை செய்தால் தண்டனை அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Edited by Siva