ஜெட் வேகத்தில் உயர்ந்த அரிசி விலை..! கிலோவுக்கு ரூ.200 அதிகரிப்பு.! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!!
தமிழ்நாட்டில் அரிசி விலை திடீரென உயர்ந்துள்ளது. மூட்டைக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்திருந்தது. இதனால் அங்கு குறைவான சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்துள்ளதால், வெளிமாநில வியாபாரிகள், டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். தற்போது வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
சென்னையில் 26 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரித்துள்ளது. இதேபோல், ஆந்திரா பொன்னி, பிரியாணி அரிசிகளின் விலையும் அதிகரித்துள்ளது.