1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. oil companies changed cylinder rate

19 கி.கி எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.12.50 உயர்வு

gas cylinder
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி கேஸ் சிலிண்டர் விலை மாற்றம் குறித்த தகவல் வெளியாகும் என்ற நிலையில் இன்று பிப்ரவரி 1 என்ற நிலையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலண்டார் 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை.  

எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சிலிண்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில்  ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகிறது.

 கடந்த ஜனவரி மாதம் சிலிண்டர் விலை  918.50 ரூபாய்க்கும், வணிக சிலிண்டர் விலை 1924 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் வீட்டு சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் வணிக சிலிண்டர் 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அது தற்போது ரூ.1937 என்று விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது



Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்.. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?