1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (20:11 IST)

காவல்நிலையத்தில் இருந்த பொருட்களை திருடிய நபர்... காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா

சென்னை திருவான்மியூர் சிக்னல் அருகேயுள்ள புற காவல்நிலையத்தில்  இருந்த பொருட்களை திருடிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூர் சிக்னல் அருகே உள்ள புற காவல்நிலையத்திற்கு  கடந்த 2 ஆம் தேதி போக்குவரத்தை சரிசெய்துவிட்டு, பிற்பகல் வேளையில் அங்கு போக்குவரத்து காவல்துறையினர் வந்துள்ளனர்.  அப்போது அங்கிருந்த ஃபேன், மின்விளக்கு உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர்.
 
பின்னர் இதுகுறித்து தரமணி காவல்நிலையத்தில், போக்குவரத்து துணை ஆய்வாளர் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலிஸார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.  அதனடிப்படையில் ஸ்டேசனில் இருந்த பொருட்களை திருடிச்சென்றதாக வினோத் என்பரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். 
 
தன் வீட்டில் பொருட்கள் இல்லாததால் இதனைத் திருடியதாக அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து பொருட்களை  மீட்டனர்.