செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (18:23 IST)

ஜோதிடர் கூறியதை நம்பி நாக்கை இழந்த நபர்!

snake pit
அறியலும், விஞ்ஞானமும் உச்சம் அடைந்துள்ள இந்தக் காலத்திலும் மூட நம்பிக்கைகள் குறைந்தபாடில்லை.

சமீபத்தில், கேரளாவில் ஒரு போலி ஜோதிடரின் பேச்சைக் கேட்டு, 2 பெண்களை ஒரு தம்பதியர் கொன்ற விவகாரம் நாட்டை உளுக்கியது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டம் கோபி என்ற பகுதி அருகே, ஒரு நபருக்கு அடிக்கடி பாம்பு கடிப்பது போன்று  கனவு வந்ததால், அவர் இதுகுறித்து ஒரு ஜோதிடரை நாடியுள்ளார்.

அந்த ஜோதிடர், இவரை பாம்பு புற்று அருகில் நின்று நாக்கை  நீட்ட வேண்டுமெனக் கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்த நபரும், அதேபோல்  பாம்பு புற்று ருகில்  நின்று நாக்கை நீட்டியுள்ளார். பாமபு அவரின் நாக்கில் கொத்தியது.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, விஷம் மேலும் பரவாமல் இருக்க, அவரது நாக்கு அகற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Edited by Sinoj