திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:47 IST)

சென்னை மாநகராட்சியில் 80 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்!

Chennai
சென்னை பிராட்வே பகுதியில் உரிமம் புதுப்பிக்காத 70 கடைககளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  சீல் வைத்துள்ளனர்
 

சென்னை  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்,  நீண்ட நாட்களாக வரி  வாடகை செலுத்தாததால், கடை மற்றும் தொழில் செய்வோர், முறைப்படி, உரிமம் பெற்றும் வாடகை  மற்றும் வரியினைச் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தி வந்த  நிலையில்,  இன்று சென்னையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது,. தொழில் வரி,  நீண்டகால வாடகை நிலுவை மற்றும் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த 86 கடைகளுக்குச் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும்,  பிராட்வே பகுதியில், தங்க சாலையில் உள்ள தொழில்வரி , கடைகளுக்கு உரிமம் பெறாமல் இயங்கி வந்த 70 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு இன்னும் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் தொழில் வரி மற்றும்  வாடகை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Sinoj