செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (13:05 IST)

நாக்குக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சையா? மதுரை அரசு மருத்துவமனை விளக்கம்

surgery
மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தையின் நாக்குக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து மருத்துவமனை தலைவர் விளக்கம் அளித்துள்ளார்
 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைக்கு நாக்கு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த குழந்தை மறு பரிசோதனைக்காக மீண்டும் மதுரை மருத்துவமனைக்கு சென்றபோது அந்த குழந்தையின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டதாக பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர் 
 
இதுகுறித்து மருத்துவமனை டீன் கூறிய போது குழந்தையின் வாய்க்குள் நாக்கு மாட்டிக் கொண்ட பிரச்சினை இருந்ததை அடுத்து அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அந்த குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது
 
அப்போது குழந்தையின் சிறுநீர் பை விரிவடைந்த கண்டுபிடிக்கப்பட்டதால் மற்றொரு மயக்க மருந்தை தடுப்பதற்காக குழந்தைகளின் பிறப்பு இருப்பில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனவே தவறுதலாக நாக்குக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டது தவறு என்று தெரிவித்துள்ளனர் 
 
குழந்தை தற்போது நலமாக இருப்பதாகவும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியுள்ளார்
 
Edited by Mahendran