ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஜூன் 2024 (11:53 IST)

செம டேஸ்ட்டு.. சாரை பாம்பை சமைத்து சாப்பிட்டு வீடியோ போட்ட ஆசாமி! – போலீஸ் வைத்த குட்டு!

திருப்பத்தூரில் சாரைப்பாம்பை பிடித்து சமைத்து சாப்பிட்ட நபர் அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பத்தூர் அருகே உள்ளா பெருமாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். சமீபத்தில் இவர் வீட்டருகே ஒரு சாரைப்பாம்பை அவர் கண்டறிந்ததாக தெரிகிறது. அதை பிடித்து கொன்ற அவர், அதோடு நில்லாமல் அதன் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி சமைத்தும் சாப்பிட்டுள்ளார்.

சமைத்து சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல் அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார். இதை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் காவல்த்துறையினர், வனத்துறையினர் கவனத்திற்கும் இந்த வீடியோ சென்றுள்ளது. அதை தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய வனத்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

Edit by Prasanth.K