1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 11 ஜூலை 2024 (17:29 IST)

நகைக்கடை உரிமையாளர் அசந்த நேரத்தில் 12 கிராம் நகையை அபேஸ் செய்த கில்லாடி பெண்!

தென்காசி மாவட்டம், சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையம் மெயின் ரோட்டில் மேற்கு பகுதியில் உள்ள கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சென்று செயின் எடுக்க வேண்டும் என்று கூறி  டிசைன் காண்பிக்கும் படி கூறியுள்ளார்.
 
அப்போது கடை உரிமையாளர் டிசைன் காண்பித்துள்ளார்.
அப்போது அந்த பெண் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.அவர் தண்ணீர் எடுக்கும் கன நேரத்தில் பலே கில்லாடி பெண் 12 கிராம் செயினை ஹேன்ட் பேக்கில் போட்டுவிட்டார்.
 
பின்பு டிசைன் பிடிக்க வில்லை என கூறி சென்று விட்டதாக கூறப்படுகிறது.அதை தொடர்ந்து கடை உரிமையாளர் நகையை சரிபார்த்த போது ஒரு செயின் குறைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 
உடனடியாக பஸ் நிலையம் சென்று தேடிபார்த்துள்ளார். எங்கு தேடியும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியா கேமராவில் பார்த்துள்ளனர்.
 
அந்த பெண்தான் நகையை திருடியது உறுதியானதும் சுரண்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் குற்றவாளியை கண்டு பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.