செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 அக்டோபர் 2018 (06:04 IST)

பாஜகவின் ஒரே இலக்கு இதுதான்: ஜோதிமணி

பாஜகவின் ஒரே இலக்கு தமிழகத்தை பினாமி அரசின் மூலம் வேட்டையாடுவதுதான் என காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்பது வெறும் அறிவிப்பு மட்டுமே, செயல் அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது சமீபத்தில் மதுரையை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையை சேர்ந்த ஹக்கிம் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியில் இருந்து தெரியவந்தது.

இதுகுறித்து ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியபோது, 'தமிழகத்தை பினாமி அரசின் மூலமாக வேட்டையாடுவது மட்டும் தான் பாஜகவின் ஒரே இலக்கு என பதிவு செய்துள்ளார்.

மேலும் சென்னையில் பெட்ரோல் விலை ரூ.87ஐ தாண்டியது குறித்து கருத்து கூறிய ஜோதிமணி, 'மோடி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை 40 ரூபாய்க்கு வரும் என்று கூரை மேல் நின்று கூவியவர்கள் எல்லாம் எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.