செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (19:56 IST)

அதிமுக வேட்பாளராக திருப்பரங்குன்றத்தில் களம் காணும் எச்.ராஜா?

தமிழகத்தில் இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன. திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக எச்.ராஜா நிறுதப்படுவார் என நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக் அமமுக கட்சி ஆதரவாளர் புகழேந்தி செய்தி வெளியிட்டுள்ளார். 
 
இது குறித்து புகழேந்தி கூறியது பின்வருமாறு, திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிற்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்து எச்.ராஜாவுக்கு சீட் தரப் போகின்றனர். 
 
எச்.ராஜாதான் திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர். இந்த தகவலை நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனால்தான் அதிமுக அமைச்சர்கள் எம்ஜிஆரை விட எச். ராஜாவை அதிகம் புகழ்கின்றனர். 
 
எம்ஜிஆர் நுற்றாண்டு நிறைவு விழா எடப்பாடி பழனிச்சாமியின் புகழ்பாடும் விழாவாக இருந்தது. எம்ஜிஆரின் நுற்றாண்டு நிறைவு விழாவாக இல்லை என மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தார்.