செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 அக்டோபர் 2018 (21:43 IST)

'பராசக்தி' படத்தை பாஜக தடை செய்திருக்கும்: ப.சிதம்பரம்

கடந்த 1952ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் மு.கருணாநிதி வசனத்தில் வெளிவந்த 'பராசக்தி திரைப்படம் திரையுலகில் மட்டுமின்றி சமூக அளவிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு அன்றைய ஆட்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து படத்தை திரையிட விடாமல் பிரச்சனை செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில் இந்த படம் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: டெல்லியில் நிலவிவரும் நிலைமையை பார்த்தால், தற்போது "பராசக்தி" திரைப்படம் வெளியிட்டு இருந்தால், நிச்சயமாக பாஜகவினர் தடை செய்திருப்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் வலிமையான அணி திமுக தலைமையில் அமையும் என்றும், அதில் காங்கிரஸ் பங்கு வகிக்கும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.