திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 18 ஜூலை 2020 (15:08 IST)

அம்மனை இழிவாகப் பேசியவர் இந்து விரோதியே – ஹெச்.ராஜா டுவீட்

அடியே மீனாட்சி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி கழட்டடி கள்ளி என்று மதுரை மீனாட்சி அம்மனை இழிவாக பேசிய சி.என்.அண்ணாதுரை இந்து விரோதியே என ஹெச்.ராஜா  தனது டுவிட்டர் பக்கத்தி பதிவிட்டுள்ளார்.

போராட்டம் நடத்தும் முன் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகப் பேசியது குறித்து பாஜகவினர் புகார் அளித்திருந்தனர். இந்த விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் வியாழனன்று சரண் அடைந்தார்.

முன்னதாக, மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் செந்தில்வாசன் என்பவரை புதன்கிழமை இரவு கைது செய்தனர். தியாகராய நகரில் உள்ள கறுப்பர் கூட்டம் யூடியூ சேனலின் அலுவலகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், இந்து விரோத திக, திமுக: அண்ணா இந்து விரோதி என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியாது என்பதால் பல பொய்கள் பரப்பப் படுகின்றன. கீமாயணம் எழுதியது யார்? அடியே மீனாட்சி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி கழட்டடி கள்ளி என்று மதுரை மீனாட்சி அம்மனை இழிவாக பேசிய சி.என்.அண்ணாதுரை இந்து விரோதியே  எனப் பதிவிட்டுள்ளார்.