நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதி குறித்த தகவல்!

Last Modified செவ்வாய், 14 ஜனவரி 2020 (08:03 IST)
ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில் அந்தத் தேர்தலின் முடிவுகள் சமீபத்தில் வெளிவந்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தலும் நடைபெற்று முடிந்தது. இதனை அடுத்து தேர்வு செய்யப்பட்ட அனைவரும் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அடுத்த கட்டமாக நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய நகர்ப்புற தேர்தல் நடைபெற தேர்தல் தேதியை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கிட்டத்தட்ட சம இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஜனவரி 27-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் இந்த தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது

இதனை அடுத்து இந்த தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மற்றும் திமுக கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் தயாராகி வருவதாகவும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :