கரூரில் புதியதாக துவங்கப்பட்ட மருத்துவக் கல்லுாரியில் இன்றுமுதல் வகுப்பு...
கரூர் மாவட்டத்தில் புதியதாக துவங்கப்பட்ட மருத்துவக் கல்லுாரியில் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் துவங்கியது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட சணப்பிரட்டி பகுதியில் கடந்தாண்டு மருத்தவக்கல்லுாரி மருத்தவமனை அமைப்பதற்காக அடிகல்நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது. பணிகள் முடிந்து நேற்று தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையிலிருந்து காணெலிகாட்டி மூலம் கல்லுாரியை துவக்கி வைத்தார். இன்று முதல் மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்த மாணவர்களுக்கு வகுப்பு துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசியதாவது, புதிய கல்லுாரி, முதலாம்மாண்டு மாவணர்கள், முதல் வகுப்பு இன்று துவங்கியுள்ளது. இந்த தங்கமான வாய்ப்பினையை மாணவர்கள் பயன்படுத்தி கொண்டு மருத்தவதுறையில் பல்வேறு சிறப்பு பிரிவு மருத்தவர்களாக தேர்ச்சியடைந்து சமூதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்கள் தாங்கள் எவ்வாறு ஒழுக்கமாக நட்ந்து கொள்கிறீர்களோ அடுத்தாண்டு மாணவர்கள் அந்த ஒழுக்கத்தை பின்பற்றுவார்கள். தமிழகத்தில் சிறந்த மருத்தவக்கல்லுாரியாக கரூர் மாவட்ட மருத்துவக்கல்லுாரி பெயர் எடுக்க வேண்டும் என்று பேசினார். தொடர்ந்து மாணவர்களை இருப்பிடம் சென்று ஒவ்வொறு மாணவர்களிடம் கைகொடுத்து அவர்களை பற்றிகேட்டரிந்தார்.
பின்னர் மருத்தவ கல்லுாரி முதல்வர் ரோஷி வெண்ணிலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, கரூர் அரசு மருத்தவக்கல்லுாரி மருத்தவமனையில்முதலாம்மாண்டில் 150 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
இதில் 14 மாணவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள், 136 மாணவ, மாணவிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதில் 6 மாணவர்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மாவர்களுக்கான விடுது வசதி தற்போது 142 மாணவ, மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ளது. ஐந்தண்டுகளுக்கு தேவையான விடுதியில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனைக்கு தேவையான வார்டன், மற்றும் பணியாளர்கள், மற்றும் மருத்தவர்கள் தேவையான அளவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று மாதத்துக்குள் மருத்துவமனையில் இங்கு கொண்டு வரப்படும், முதலாண்டு முதலே நோயாளிகளை அவர்கள் பார்ப்பார்கள், நோயாளிகளிடம் எவ்வாறு பேசுவது, அணுகுவது குறித்து கற்றுக்கொடுக்கப்படும் என்றார்.