திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 27 நவம்பர் 2024 (11:35 IST)

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூடும் தேதியை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவின் ஆய்வுக்குழு கூட்டம் கடந்த சில நாட்களாக மதுரை உள்பட சில நகரங்களில் நடந்தது. ஆய்வுக் கூட்டத்தில் அடிதடி சண்டை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் நவம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை மாநகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில், அமைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த கூட்டத்தில் அடுத்தகட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Edited by Siva