1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 3 டிசம்பர் 2018 (13:45 IST)

கருவில் இருப்பது ஆணா - பெண்ணா ...? கண்டறிந்து கருக்கலைத்த பெண் கைது

திருவண்ணாமலை  மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தி (42). இவர் சில ஆண்டுகளுக்கு முன் டாக்டர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இவர் அங்குள்ள கிளினிக்கில் பணியாற்றும் போது அரசால் தடைசெய்யப்பட்டுள்ள  கருவில் உள்ளது ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து கூறும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
 
இந்நிலையில் கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிந்து கொண்டு கருக்கலைப்பில் ஈடுபடுவதை தன் தொழிலாகக் கொண்டிருந்திருக்கிறார்.
 
இவ்விவகாரத்தில் ஏறகனவே சிறைசென்று ஜாமீனில் வெளிவந்த ஆனந்தி  மீண்டும் இதேகருக்கலைப்பில் ஈடுபட்ட சம்பவம் அங்குள்ள சுகாதார பணியாளர்களுக்குச் சென்றுள்ளது.
 
எனவே சில தினங்களாகவே ஆனந்தியை கண்காணித்து வந்த அதிகாரிகள் நேற்று அவரை சரியான ஆதாரத்துடன் பிடித்தனர்.
 
அப்போது ஆனந்தியிடம் ஸ்கேன் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் ஆனந்திக்கு உதவியாக செயல்பட்ட அவரது கணவர் தமிழ்செவன் , ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர் .
 
கருவில் இருக்கும் குழந்தை ஆணா , பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த பெண்ணால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.