ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2018 (09:02 IST)

சென்னையில் பெண்களை கொடூரமாக தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள்

சென்னையில் இரு வேறு இடங்களில் நடந்து சென்ற பெண்களை கொடூரமாக தாக்கி மர்மநபர்கள் தங்கச்சங்கிலி பறித்துச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் குற்றசம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிக்கும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே போகிறது. சென்னையில் இதுபோன்ற சபவங்கள் அரங்கேறுவது வாடிக்கையாகி வருகிறது.
 
 
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி மேனகா (45).  மேனகா நடந்து சென்றபோது, அவர் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள், மேனகாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். மேனகா சுதாரித்துக்கொண்டு நகைகளை பிடித்துக்கொண்டார். இருப்பினும் அந்த நபர் தங்கச்சங்கிலியை கையில் பிடித்துக்கொண்டு அவரை சாலையில் தரதரவென்று இழுத்துக்கொண்டே சென்றார். அதிர்ஷ்டவசமாக அவர் நகை தப்பியது. இதில் மேனகா படுகாயம் அடைந்தார். 
 
அதே போல் குன்றத்தூரில் சாலையில் நடந்து சென்ற ஜெயஸ்ரீ என்ற பெண்ணிடம் மர்மநபர் ஜெயஸ்ரீயை தாக்கி அவரிடம் இருந்த 5 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றான். இதனால் சென்னை வாசிகள் ரோட்டில் நடந்து செல்வதற்கு கூட பயப்படுகின்றனர்.
 
இந்த இருவேறு சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.