திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 பிப்ரவரி 2018 (15:34 IST)

சன்னி லியோனுக்கு தடை விதிக்க சென்னையில் புகார் மனு!

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வீரமாதேவி என்ற தமிழ் படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படம் மிகுந்த பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த 7-ஆம் தேதி முதல் பூஜையுடன் தொடங்கியது. பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் படப்பிடிப்புத் தளத்தில் நடைபெறும் வீரமாதேவி படப்பிடிப்பில் சன்னி லியோன் கலந்துகொள்ளவுள்ளார்.
 
இந்நிலையில் இதுகுறித்த விளம்பரங்கள் அந்த பகுதியில் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை காண அங்கு அதிக அளவில் இளைஞர்கள் கூடுவார்கள். ஏற்கனவே சன்னி லியோன் ஆபாச படங்கள் இளைஞர்கள், குழந்தைகள் மனதை கெடுக்கும் வகையில் உள்ளது.
 
இந்நிலையில் அவர் நடிக்க இருக்கும் தமிழ் கலாச்சாரத்தை சொல்ல இருக்கும் வீரமாதேவி படத்திலும் அவர் கவர்ச்சியாக நடிக்க வாய்ப்பு உள்ளது. இளைஞர்கள் அங்கு கூட வாய்ப்பு உள்ளதால் இந்த படப்பிடிப்பில் சன்னி லியோன் கலந்துகொள்ள தடை விதிக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புகார் மனுவை, குழந்தைகள், பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும், ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு எதிராகவும் போராடும் சமூக ஆர்வலரான எமி என்ற இனோச் மோசஸ் அளித்துள்ளார்.