1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 10th grade student committed suicide in chennai

சென்னையில் சக மாணவிகள் பேசாததால் விரக்தியில் 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை
பள்ளியில் சக மாணவிகள் தன்னிடம் பேசாததால் 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த நீலாங்கரையைச் சேர்ந்தவர் துரை. இவரது மகள் ஹரினீஸ்வரி(14). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  ஹரினீஸ்வரி வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளிக்கு சென்ற ஹரினீஸ்வரியிடம் அவரது தோழிகள் யாரும் பேசவில்லை. அவராக போய் பேசினாலும், சக மாணவிகள் அவரிடம் பேசுவதை புறக்கறித்தனர். இதனால் பள்ளி முடிந்தவுடன் மாணவி, மன வேதனையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
இதனையடுத்து வீட்டிற்கு சென்றதும் ஹரினீஸ்வரி, துக்கம் தாளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விட்டிற்கு வந்த மாணவியின் பெற்றோர் தங்களது மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
அன்பெனும் மழையில் நனைந்தேன் - இளையராஜா நெகிழ்ச்சி