ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (13:36 IST)

காணாமல் போன சிறுவன் கால்வாயில் சடலமாக மீட்பு! – சென்னையில் அதிர்ச்சி!

Death
சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் காணாமல் போன சிறுவன் கால்வாயில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை ஊரப்பாக்கம் அடுத்த ஆதனூர் பகுதியில் நேற்று மாலை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த டானியல் ஜான் என்ற சிறுவன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிறுவனை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீஸார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் விளையாடும்போது தவறி வாய்க்காலில் விழுந்து உயிரிழந்திருக்கும் சாத்தியங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் புதுச்சேரியில் சிறுமி கொலைசெய்யப்பட்டு வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் சிறுவன் வாய்க்காலில் சடலமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K