வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 13 மார்ச் 2020 (17:29 IST)

இயேசுநாதர் சிலையில் இருந்து நீர் வடிந்த அதிசயம் !

இயேசுநாதர் சிலையில் இருந்து நீர் வடிந்த அதிசயம் !

கூடங்குளம் அருகே தேவாலயத்தில் உள்ள இயேசு சிலையில் நீர் வடிந்ததால், மக்கள் அனைவரும் வந்து அதிசயத்துடன் வழிபட்டு சென்றனர்.
 
நெல்லை மாவட்டம் கூடங்குலம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் சிலுவை தேவாலயம் உள்ளது. இங்கு ஒரு சிலுவை நாதர் சிலை உள்ளது. கிறிஸ்தவர்கள், 40 நாட்கள் வருகிற 9 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் தினமும் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், நேற்று சிலுவை நாதர் சிலையில் கால்விரல்களில் வ்ழியே நீர் வெளியேறி வடிந்துள்ளது. அதைப் பார்த்த மக்கள் அந்நீரை எடுத்து குடித்து, உடலில் பூசி வழிபட்டனர்.