நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் ! ஹெச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சீமான் !

h raja seeman
sinoj kiyan| Last Modified வெள்ளி, 10 ஜனவரி 2020 (17:59 IST)
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமீபத்தில் கூட்டமொன்றில் நெல்லை கண்ணன் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து நெல்லை கண்ணன் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்
 
இந்த மனு மீதான விசாரணை  நடைபெற்ற போது,  கடந்த 3ஆம் தேதி நெல்லை கண்ணனின் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது . 
 
இந்நிலையில், இன்று  நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து இன்னும் சில மணி நேரத்தில் அவர் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்சாவுக்கு எதிராகப் பேசியதாக நெல்லை கண்ணன் கைது செய்தபோது, பாஜக தேசிய செயலர் ராஜா ஆபரேஷன் சக்சஸ் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.
twitter
இதற்கு பதிலடி தரும் வகையில் இன்று, சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் , அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை!!  ஆபரேசன் பெயிலியர்! என தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :