வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (13:08 IST)

சுயஇன்பம் செய்து விந்தை ஐஸ்கிரீமில் கலந்து விற்ற ஆசாமி! – வீடியோ வைரலான நிலையில் கைது செய்த போலீஸ்!

Telangana
சுய இன்பம் செய்து அந்த விந்தை ஐஸ்கிரீமில் கலந்து விற்ற நபரை தெலுங்கானா போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தெலுங்கானாவின் வராங்கல் மாவட்டத்தில் உள்ள நெக்கொண்டா மண்டல் பகுதியில் சாலையோர குல்ஃபி ஐஸ்கிரீம் கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த காலுராம் குர்பியா என்ற நபர் அந்த கடையை நடத்தி வந்துள்ளார். சமீபத்தில் குர்பியா சுய இன்பம் செய்து வெளிப்படும் விந்து திரவத்தை ஐஸ் கிரீமில் கலந்து குல்ஃபி தயாரித்ததாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அதிரடி நடவடிக்கை எடுத்த தெலுங்கானா போலீஸார், மக்கள் சாப்பிடும் உணவில் இதுபோன்ற அருவருக்கத்தக்க விஷயங்களை செய்ததற்காக குர்பியாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பபம் தெலுங்கானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K