குழந்தைகளுக்கு ஆபாச படம் காட்டிய நபர் கைது !

MADURAI
Last Updated: வெள்ளி, 19 ஜூலை 2019 (16:02 IST)
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தெருவில் சிறு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் ஆபாச படம் காட்டிய நபரை  போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.  இந்த தொழில்துட்பத்தை நாம் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துகிறோமா.. இல்லை.. தீயவற்றிக்காக பயன்படுத்துகிறோமா என்பதைப் பொறுத்துதான் சமுதாயம் வளர்வதும் வீழ்வதும் இருக்கிறது. ஆனால் தற்போது வக்கிரத்துக்கு அடிமையானவர்கள் செய்யும் அட்டூழியத்திற்கு சிறுவர் - சிறுமியர் - பெண்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்தக் குற்றத்திற்கு கடுமையான தண்டனைகள் கிடைத்தாலும் இந்த நடவடிக்கைகள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
 
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள சம்மட்டிபுரம் என்ற  கிராமத்தில் தெருவில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தஒரு நபர் சிறுமிகளுக்கு ஆபாச படம் காட்டியுள்ளார். இதனால் சிறுவர்கல் அலறி அடித்துக் கொண்டு ஓடி தங்கள் பெற்றோரிடம் தகவல் அளித்தனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மக்கள்  அந்த நபரை தேடினர். ஆனால் அவரைக் காணவில்லை. எனவே அங்கிருந்த சிசிடிவியை ஆராய்ந்தனர். 
 
அதில், கட்டிடவேலை செய்வதற்காக வந்த வாடிப்பட்டியைச் சேர்ந்த  கொத்தனார் சுரேஷ் என்பவர் தான் இந்த வக்கிரச் செயலில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.பின்னர் காவல் நிலையத்தில் குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :