திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஜூலை 2019 (17:33 IST)

வீட்டின் வாசலில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் கொலை !

மதுரை மாவட்டம்  அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த் ஒருவர், தன் வீட்டு வாசலில் படுத்து தூங்கிக்க்கொண்டிருந்த போது, மர்ம ஆசாமியால் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகவே கொலை சம்பவம் அதிகளவு தமிழ்நாட்டில் நடந்துவருவதாக செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் ஒருவர் தன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த போது, மர்ம ஆசாமி ஒருவர் அவரது தலையில் கல்லைப் போட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். 
 
இதுகுறித்த தகவல்கள் தெரிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.