திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (15:10 IST)

பாதிரியார் பெனடிக் வழக்கில் முக்கிய சாட்சியான இளம்பெண் மாயம்

Father Benedict
பாதிரியார் பெனடிக் ஆன்றோ வழக்கில் விசாரணைக்கு வரவேண்டிய பெண் ஒருவர் மாயமானதால் பரபரப்பு நிலவுகிறது.

கன்னியாக்குமரி மாவட்டத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ(27). அவர் 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்புகொண்டு அவர்களுடன் வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் மற்றும் வீடியோ காலிங் பேசியதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில். பேச்சிப்பாறை பகுதியில் வசித்து வரும்  நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து, பாதிரியாய போலீஸார் தொடர்ந்து தேடி வந்த  நிலையில், நாகர்கோவிலில் பதுங்கியிருந்த ஆன்றோவை  கடந்த 20 ஆம் தேதி கைது செய்து, நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பாதிரியார் பெனடிக் ஆன்றோவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த  நிலையில்,  பாதிரியார் பெனடிக் ஆன்றோ வழக்கில் விசாரணைக்கு வர வேண்டிய பெண் ஒருவர் மாயமானதல் பரபரப்பு நிலவுகிறது.

தற்போது, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியாரிடம் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில்ல், இந்த வழக்கில் விசாரணைக்கு வரவேண்டிய பெண் ஒருவர் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்பெண்தான் இந்த வழக்கில் முக்கிய சாட்சியம் என்பதால் அவரிடம் வாக்குமூலம் வாங்க போலீஸார்  நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காவல் நிலையங்களுக்கு அழைக்காமல் நேரடியாக அவர்களிடம் சாட்சியம் பெறப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.