1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 9 ஜூலை 2020 (21:43 IST)

காதலியை தேடிச் சென்று கிணற்றில் விழுந்த காதலன்…

சென்னை அம்பத்தூரில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் இந்தக் கொரோனா காலத்தில் தனது காதலியைக் காண முடியவில்லை என்று தவித்துள்ளார். இதனால் எப்படியும் காதலியைப் பார்த்தே ஆக வேண்டும் என முடிவு செய்து தனது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபின் தன் காதலியின் செல்போனுக்குப் போன் செய்து நான் உன் வீட்டிற்கு அருகில் தான் உள்ளேன்! வெளியே வா  என கூறியுள்ளார்.

அப்போது, அவரது காதலில் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் இளைஞரைப் பார்த்து திருடன் என விரட்டியுள்ளனர்.

அப்போது ஒரு  மதில்சுவற்றைத் தாண்டிக் குதிக்கும்போது சுமார் 75 அடி ஆழட்க் கிணத்தில் விழுந்துவிட்டார். பின்னர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சமப்வ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் இளைஞரை மீட்டனர். அந்தக் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் இளைஞருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்  செய்திகள் வெளியாகிறது.