வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 9 ஜூலை 2020 (17:48 IST)

சிறுமியை 3 மாதங்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை…

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த தன் பாட்டிடன் வசித்து வந்துள்ளார் மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி ( 15 ).

இந்நிலையில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி  தன் பாட்டியுடன் சண்டைப் போட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர், பெரம்பூர் ரயில் நிலையத்தில்  சுற்றித் திருந்துள்ளார்  சிறுமி.  அப்போது சிறுமிக்கு அடைக்கலம் கொடுப்பதுபோல் பேச்சுக் கொடுத்து வெங்கடேசன் திருத்தணிக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்ற சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் வெங்கடேசன் தாயிற்கும் அவருக்கும் இடையே சண்டை வலுத்துள்ளது.

இந்நிலையில் வேலை நிமித்தமாக வெங்கடேசன் வெளியூர் செல்லவே அவரது தாய் சிறுமியைக் காப்பாற்றும் நோக்கில் வீட்டைவிட்டு வெளியே அனுப்பியுள்ளார்.

இதையத்து திருத்தணி ரயில் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த சிறுமியிடம் ரயில்வே போலீஸார் விசாரித்தனர். சிறுமி நடந்த கொடுமைகளை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் வெங்கடேசை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.