1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 மே 2019 (11:23 IST)

தெர்மாக்கோல் வீடு : ஏசிக்கு சவால் விடும் குளுகுளு ஆச்சர்யம்

பெரம்பலூர் அருகில் செயற்கை ரசாயன அட்டையான தெர்மாகோலால் கட்டப்பட்டுவரும் வீட்டை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
பெரம்பலூர் அருகே செட்டிக்குளம் என்ற கிராமத்தில் வசிப்பவர் ராமர் (40).இவர் அப்பகுயில் ஒரு ஸ்டுடியோ வைத்துள்ளார்.தற்போது அவர் ,அங்கு தெர்மாகோல் மூலம் வீடு கட்டி வருகிறார்.
 
அதாது தெர்மாக்கோல் மூலமாக வீடு கட்டுபவரான ஆனந்தை  ஆன்லைனில் மூலமாகத் தொடர்பு கொண்டு இவ்வீட்டைக் கட்டிவருகிறார்.இந்த வீட்டின் பணிகள் 50 % அளவுக்கு முடுவடைந்துள்ளன.
 
வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான தெர்மாக்கோல் வீடு, தற்போது இந்தியாவிலும் பிரபலமாகிவருகிறது. இதுகுறித்து எஞினியர் ஆனந்த் கூறியதாவது :
 
குறிப்பிட்ட அளவுகளில் எடுக்கப்பட்டு தேவையான அளவுகளில் வெல்வெட்மெஷ் என்ற கம்பி வலைகளுக்கு இடையே 3 அங்குலம் அளவுள்ள தெர்மாகோல்களை வைத்து,பேனல்களாக வைத்து வழக்கமான சுவர்களுக்குப் பதிலாக இதை பொருத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
 
இதன்மூலமாக செங்கல், ஹாலோம் பிளாக் வீடுகளை விட மிகுந்த காலம், நேரம் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முக்கியமாக இதற்கு தண்ணீர் செலவு குறைவு, எடையும் பெருமளவு குறையும், கான்கிரீட் வீடு போன்று எளிதில் விரிசல் விழாது என்றும்,எப்பேர்பட்ட சூறாவளி, புயல் , போன்றவற்றை தாங்கி நிற்கும் . 
 
அதேசமயம் ஏசியே இல்லாமல் வீட்டுக்குள் கூலிங்காக இருப்பதுதான் தெர்மாக்கோல் வீட்டின் சிறப்புத்தன்மை  : மேலும் ஏசி பயன்படுத்தாமல் இருப்பதால் கரண்ட் செலவு மிச்சம் என்பதும் முக்கியாமனது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.