செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (11:21 IST)

குத்துவிளக்கை கொள்ளிக்கட்டையா பாக்காதீங்க... தமிழிசை ஆதங்கம்!!

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு தனது எதிர்ப்பையும் ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை , பெண்கள் பாதுகாப்பாக வளர வேண்டிய சூழ்நிலையை தாண்டி, ஒரு ஆண் பெண்ணுக்கு எவ்வாறு மரியாதை தர வேண்டும் என்பதை கற்றுத்தந்து ஆண்களை வளர்க்க வேண்டும். 
 
புன்னகையுடன் வீட்டை விட்டு வேளியே போகும் பெண் அதே புன்னைகையுடன் வீடு திரும்புவதில்லை. கட்டுப்பாடு இல்லாத இன்றைய சூழலில் பெண்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பெண்ணுக்கு முன்னுரிமை தருகிறோம் என்று கூறி கொண்டு குத்துவிளக்கை கொள்ளிக்கட்டையாக பார்க்கின்றனர்.
 
தயவு செய்து பெண்களை பூத்து குலுங்கவிடுங்கள், மொட்டுகளை கனியவிடுங்கள். அதை ஆரம்பத்திலேயே கசக்கி எறியாதீர்கள். கருணையே இல்லாதவர்களுக்கு கருணை காட்டக்கூடாது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.